Designed by Iniyas LTD
மல்லாவியில் பாட்டிக்கு ஏற்பட்ட கொடூரம்!
தனியே வசித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற கொள்ளையர் மூதாட்டியைத் தாக்கி, வாய், கைகளைக் கட்டிவிட்டு வீட்டின் பின்புறம் பற்றைக்குள் வீசிவிட்டு நகைகளையும் பணமும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த 63 வயதுடைய மூதாட்டி படுகாயமடைந்தார்.
அவர் நேற்றுமுன்தினம் காலை அயலவர்களால் மீட்கப்பட்டு மல்லாவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அது தொடர்பபில் விசாரணை நடத்துவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.