Designed by Iniyas LTD
மல்லாவி அணிஞ்சியன்குளம் பொது மண்டப வீதியால் மக்கள் அவலநிலை…
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பிரதேசத்தில் உள்ள அணிஞ்சியன்குளம் 2ஆம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டப வீதியின்ஜந்தாம் ஒழுங்கை இதுவரை திருத்தப்படாதுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இதன் காரணமாக வீதியால் பயணம் செய்வதில் மக்கள் பாரிய இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மாகாணசபை தொடங்கி ஜந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குறித்த வீதி திருத்தப்படாமல் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை துணுக்காய் பிரதேச சபையின் கீழ் காணப்படும் 2.5 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்த வீதியினை நம்பி 800 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஜநூறிற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட குறித்த கிராமத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் தொடக்கம் கர்பிணிபெண்கள் வரைக்கும் இந்த வீதியினையே பயன்படுத்துகின்றார்கள் என்றும்,
தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் குறித்த வீதிமுற்றுமுழுதாக சேறும் சகதியுமாக காணப்படுகின்றதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் செல்லும் பெண்கள் கர்பிணி பெண்கள் வயோதிபர்கள் சறுக்கிவிழுந்துஎழும்பி செல்கின்றார்கள் எனவும் மழை பெய்தால் உந்துருளி கூட செல்லமுடியாத நிலை காணப்படுகின்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
