தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாகாணத் சபை தேர்தல் தொடர்பில் ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை ..

மாகாண சபைத் தேர்­தல்­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பால் நாடா­ளு­மன்­றத்­தில் இன்று ஒத்­தி­வைப்­பு ­வே­ளைப் பிரே­ரணை கொண்டு வரப்­ப­ட­வுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்  தெரிவித்துள்ளார்.

குறித்த  ஒத்­தி­வைப்­பு­வே­ளைப் பிரே­ர­ணை­யில்,  2017ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதத்­து­டன் 3 மாகாண சபை­க­ளின் பத­விக்­கா­லம் நிறை­வ­டைந்­துள்­ளதாகவும்,

தேர்­தல் முறை­யில் சீர்­தி­ருத்­தங்­க­ளைக் கொண்டு வரு­வ­தற்­காக மாகாண சபை தேர்­தல் சட்ட விதி­க­ளில் மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­த­னால் மேற்­கூ­றிய 3 மாகாண சபை­க­ளி­ன­தும் தேர்­தல்­கள் இன்று வரை நடை­பெ­றா­துள்­ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே­வேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதத்­து­டன் மேலும் மூன்று மாகாண சபை­க­ளின் பத­விக்­கா­லம் முடி­வ­டை­ய­வுள்­ளதாகவும் . தேர்­தல் சட்ட சீர்த்­தி­ருத்­தங்­கள் இன்­னும் முடி­வ­டை­யா­துள்­ள­த­னால் எந்­த­வொரு மாகாண சபைக்­கும் தேர்­தலை நடத்த முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்­தல் சட்ட விதி­க­ளின் திருத்­த­மா­னது உட­ன­டி­யாக செய்து முடிக்­கப்­பட வேண்­டிய தேவை இத­னால் எழு­கின்­றது என்றும் . இதன் மூலம் பல்­வேறு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த மக்­க­ளின் உரி­மை­கள் மேலும் மறுக்­கப்­ப­டா­மல் செய்ய முடி­யும் எனவும் கூறப்பட்டுள்ளது..

அதோடும் மாகாண சபை தேர்­தல் சட்ட விதி­க­ளில் சீர்­தி­ருத்­தத்தைமேலும் தாம­த­மின்றி செய்து முடிக்­கு­மாறு நாம் அரசை வலி­யு­றுத்­து­கின்­றதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் எதிர்­வ­ரும் 2 மாதங்­க­ளுக்­குள் இந்த சீர்­தி­ருத்­தங்­களை செய்­யத் தவ­றும் பட்­சத்­தில் 2017ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்­தம்) சட்­டம் இல.17 உட­ன­டி­யாக நீக்­கப்­ப­டு­வ­தன் மூலம் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்தி முடிக்க அரசை நாங்­கள் வலி­யு­றுத்­து­கின்­றோம் என்­றும் குறித்த பிரேரணையில் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...