Designed by Iniyas LTD
மாதாந்த நினைவுவணக்க நிகழ்வு – வைகாசி 2018
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அனைத்து ஆண்டுகளிலும் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் தமிழர் இனவழிப்பின் உச்சக்கட்டமான மே 2009 இல் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இன்னுயிரை ஆகுதியாக்கிய ஈக மறவர்கள், வீரகாவியம் படைத்த எமது சமர்க்கள நாயகர்கள் மற்றும் குழந்தைகள் முதல் முதியோர் வரை நோயாளிகள் முதல் கற்பிணி தாய்மார் பெண்கள் என சிங்களம் நரபலி எடுத்த இறுதிமாதம் மே 2009 ஆகும்.
அத்தோடு இதுவரை காலமும் அன்னிய சிறீலங்கா அரசபடைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்கள், நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் உட்பட அனைவருக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், வழமைபோல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் (OX17 3NX) இன்றையதினம் நடைபெற்றது.










