தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாநிலங்களவையில் சிறார் சட்டத்திருத்த மசோதா மீது இன்று விவாதம்

15TH_CITY_PARLIAME_1144100fகொடுங்குற்றம் புரியும் சிறார்களுக்கான வயது வரம்பை 18-லிருந்து 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை முடிந்த இளம் குற்றவாளியின் விடுதலையை தடுக்க முடியாததால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுபோன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஒத்துழைத்தால், மசோதா இன்று நிறைவேறும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 இந்த விவகாரத்தில் மத்திய அரசு குழப்பம் ஏற்படுத்துவதாகவும், டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்ப முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். இருப்பினும் சிறார் சீர்திருத்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 சிறார் என்பதற்கான வயது வரம்பை 18-லிருந்து 16ஆக குறைக்க வழிவகை செய்யும் சிறார் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் நிறைவேறாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது.

Comments
Loading...