தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் பதவியிலிருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டுள்ளார்

மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் பதவியிலிருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவராக நவநீதகிருஷ்ணன் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை அதிமுக குழுத் துணைத் தலைவராக முத்துக்கருப்பனும், கொறடாவாக சசிகலா புஷ்பாவும் நியமிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.CM-J-dsada

இதேபோன்று, மக்களவை அதிமுக குழுத் தலைவராக வேணுகோபாலும், துணைத் தலைவராக குமாரும், கொறடாவாக கே.என்.ராமச்சந்திரனும் செயல்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவராக வேணுகோபால், துணைத் தலைவராக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், அதிமுக மருத்துவ அணித் தலைவர் பொறுப்பிலிருந்து மைத்ரேயன் விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...