தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி பொது மேலாளரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளது.neyveli.jpg.crop_display

கோரிக்கை நிறைவேறாவிட்டால் நோட்டீஸ் அளித்த 15 நாட்களுக்குப்பிறகு எந்த நேரத்திலும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடப்போவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்புப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தீர்ப்பளித்து ஓராண்டுக்கு மேலாகியும் ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கூறி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பணிமூப்புப்பட்டியலில் உள்ள முதல் 200 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனை ஏற்க ஒப்பந்தத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

Comments
Loading...