தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவுகூர வேண்டாம் – இராணு ஊடகப் பேச்சாளர் …

மாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவுகூர வேண்டாம் என தெரிவித்த இராணு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, உறவுகளை நிறைவுகூரத் தடையில்லை எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது

“யுத்தகாலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர, வடக்கு வாழ். தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது.

ஆனால், மாவீரர் தினம் என்ற பேரில் புலிகளை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது என்பதே இராணுவத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளதாகவும்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதன்காரணமாக அவர்களை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது” எனவும் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து கூறியுள்ளார்.

இதேவேளை  இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்கவும்  மாவீரர் தினத்தை இவ்வாண்டு முன்னெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...