Designed by Iniyas LTD
மின்கம்பத்துடன் மோதி தப்பிச்சென்ற கப் ரக வாகனம் ..

முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் உயரழுத்த மின்கம்பத்தை மோதி தள்ளிவிட்டு சென்றுள்ளது.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கப் ரக வாகனத்தினை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையிலேயே மின்கம்பத்தில் மோதுண்டு வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த வாகனத்தினை பொலிஸார் இடைமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனர்.
இதன்போது , குறித்த வாகனம் நிற்காமல் சென்ற நிலையில் பொலிஸார் துரத்தியபோது உயரழுத்த மின் கம்பத்தை மோதிவிட்டு சென்றுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதிக்கான மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஐயன்கன் குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.