Designed by Iniyas LTD
மியன்மாரின் வடபகுதியில் 17 பேர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மியன்மாரின் வடபகுதியில் பச்சை மாணிக்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் பல பகுதிகளில் பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன .
பாறை
இந்நிலையில், குறித்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது , அந்த சுரங்கத்தின் பாறை ஒன்று திடீரென்று உருண்டு கீழே விழுந்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.
