தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்   இடைநிறுத்த   உத்தரவு

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் பணியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்   இடைநிறுத்த   உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா பிறப்பித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள  அறிக்கையில் இதுதொடர்பில்  கூறப்பட்டுள்ளது.

தங்குமிட வசதிகள்

இன்று ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கணிஷ்ட தடகள போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்கத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடு காரணமாக இலங்கையை பிரதிநிதித்துவம் வீர வீராங்கனைகள் முகங்கொடுத்துள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
Loading...