தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மியன்மார் அகதிகள் உள்ள இடத்தைச் சூழவுள்ள பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை தடை

மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாதென காலி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்மாரைச் சேர்ந்த 30 அகதிகள் கல்கிஸ்ஸையுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த போது பிக்குகள் சிலருடன் வந்த கும்பலினால் அவர்கள் இருந்த வீடு தாக்குதலுக்கு இலக்கானது. இதனையடுத்து அவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் பூஸா இராணுவ முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த பூஸா முகாமில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...