தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஐ.ஓ.சி. நிறுவனம் முஸ்தீபு

எரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையிலுள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிடுகையில், இந்நாட்டிலுள்ள தற்போதைய விலையில் எரிபொருள் விநியோகிப்பதால் தமது நிறுவனம் நட்டமடைய வேண்டி வரும் என அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் ஷியாம் போரா அறிவித்துள்ளார்.

அரசாங்கம் எரிபொருள் தொடர்பிலான வரியைக் குறைக்க வேண்டும். அல்லது எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டும் என தாம் கோரிக்க விடுத்துள்ளதாகவும் அதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...