தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மியான்மரில் நடக்கும் மாநாட்டுக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் சந்திப்பது சாதாரண விஷயம்- நாராயணசாமி

நாராயணசாமிமியான்மரில் நடக்கும் மாநாட்டுக்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் சந்திப்பது சாதாரண விஷயம். ஆனால், இதனை தமிழக கட்சிகள் அரசியல் ஆக்குகின்றன என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மியான்மரில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக அந்நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பிரதமர், ராஜபக்சேவை சந்திப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயம். ஆனால், தமிழக கட்சிகள் அதனை அரசியல் ஆக்குகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Comments
Loading...