தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வைகையில் பீகாரில் இன்று நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது நரேந்திர மோடி பேசியதாவது: பீகார் மாநிலத்திற்கு அழைப்பை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி வந்தேன். அதனை என்னுடையை மரியாதையாக கருதினேன். நான் வந்த போது பாட்னாவில் பல்வேறு இடங்களில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலியானர்கள் மற்றும் காயம் அடைந்தனர். இது பீகாருக்கு மட்டும் காயம் இல்லை இது மொத்த நாட்டுக்கே ஏற்பட்ட காயம். நாட்டின் ஒருமைபாட்டுக்கு எதிராக நடத்த தாக்குதலில் ஏற்பட்ட காயம். இத்தகைய பெரிய தாக்குதலை அடுத்தும் பீகார் மாநில மக்கள் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தில் உறுதியாக உள்ளனர்.மோடி

ஒற்றுமை மற்றும் அமைதி இல்லாமல் இந்தியாவால் முன்னேற முடியாது. பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிரான எச்சரிக்கைகளை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் ஒருவேளை பாரதீய ஜனதா அல்லது மோடிக்கு எதிரானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை குறிவைக்க வேண்டும்? இதனால் எனது பீகார் மாநில சகோதர சகோதரிகளே இறந்தனர். ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள் இதனை புரிந்து கொள்ளவில்லை.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் நன்றாக இருப்பதற்கு வாழ்த்துகிறேன். அவரது உடல்நிலை மீண்டும் சீரடைய நான் வேண்டுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி விரிவானது. நான் ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் சிராங் பாஸ்வானை நமது குடும்பத்திற்கு வரவேற்கிறேன். நாம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மற்றவர்களின் கவலைகள் மேலும் வளர்ந்து வருகிறது.

இந்த மூன்றாவது அணி என்பது என்ன? அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அளிப்பார்கள். மூன்றாவது அணியால் நிலையான தலைவர்களை கொடுக்க முடியாது.  பொது வாழ்வில் பாசாங்குக்கு எந்த இடமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வான் விலகியபோதும் அவர் என்னை எங்கு எல்லாம் சந்திக்கிறாரோ அப்போது எங்களுடன் சுமூகமாக பேசிகொள்வார். அவர் பத்திரிக்கைகள் இருவரது போட்டோக்களை போடுவதை பற்றி கவலைப் படமாட்டார். ஆனால் சில தலைவர்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் சுமூகமான முறையில் பேசுவார்கள் ஆனால் பொது மக்கள் முன்னிலையில் பேச தயங்குவார்கள் என்று மோடி பேசினார்.

Comments
Loading...