Designed by Iniyas LTD
மியான்மாரில் 7 இராணுவத்திருக்கு 10 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மியன்மார் இராணுவத்தினர் 7 பேருக்கு தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரோஹிங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் வடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனை இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி மின் ஆங் ஹலாய்ங்கின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இராணுவ ஆதரவுடன் கூடிய வன்முறைகளால் சுமார் 7 லட்சம் பேர் பங்களாதேஷ் இடம்பெயர்ந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.