தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதி வசமுள்ள அமைச்சுக்கள் மனோகணேசன் அமைசுக்களின் கீழ் இணக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வசமுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோக ணேசனின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்     அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசின்  அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது  அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி ஒரே விடயதானத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு தனித்தனியே அமைச்சுகளை நியமிக்காமல் அவை அனைத்தையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவர உள்ளதாக  ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது

தனது இந்த நிலைப்பாட்டை நேற்றையதினம்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர்  வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு அமைய தனது கட்டுப்பாட்டின்கீழுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, மனோ கணேசன் தற்போது வகிக்கும் அமைச்சுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது  தெரிவித்துள்ளார்.

இதேவேளை  போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அமைச்சுகளுக்கும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்த்கக்கது.

Comments
Loading...