தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் ஏமாற போகிறார்களா தமிழர்கள்! மைத்திரியுடன் இரகசியமாய் சந்தித்த சம்மந்தன் உட்பட சில புலம்பெயர் அமைப்புக்கள்..?

கிழக்கு மாகாண அபிவிருத்தி எனும் பெயரில் தற்போது எதிர்க்கட்சித்தலைவராக உள்ள சம்மந்தன் மற்றும் கனேடிய காங்கிரஸ் பேரவையை சேர்ந்த சாந்தகுமார் மற்றும் பேன்டன், பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த நரேன், மேலும் அவுஸ்த்ரேலிய தமிழ் காங்கிரஸ்,உலகத்தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் ஆகியோர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளது,தற்போது தாயகமெங்கும் மக்கள் உணர்வெளிச்சியோடு தங்கள் சொந்த நிலத்திற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியும் போராடி வரும் இந்த வேளையில் இவ்வாறான இரகசிய சந்திப்பை நிகழ்த்தியிருப்பது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கிலேயே என தமிழ் உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தாயக விடுதலைக்காக போராடி உடலில் பல காயங்களோடு உதவிகள் இல்லாமல் கஷ்டப்படும் முன்னாள் போராளிகளை கூட இவர்கள் சிந்திக்கவில்லை, மேலும் கணவனை இழந்து குடும்பத்தின் பொறுப்பினை சுமந்து இன்று வாழ்வாதாரத்திற்கே போராடும் எங்கள் ஈழப்பெண்களை கூட இவர்கள் சென்று பார்க்கவும் இல்லை.

ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பல தடவை கைக்குள் வந்து சென்றபோதெல்லாம் இப்படியான தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தினால் கைநழுவிச்  சென்றுள்ளது.

ஆங்கிலேயர்கள் இலங்கையை பிரித்து கொடுக்க முற்பட்ட போது பணத்தாசை பிடித்த தமிழர்களால் அன்று சிங்கள இனவாதத்தின் கைக்கூலிகளாக மாறியதால் இன்று வரை பலி கொடுத்த உயிர்களுக்கு கணக்கில்லை.

சிறிலங்காவை போர் குற்ற விசாரணையிலிருந்து பாதுகாக்க இவர்கள் கைக்கூலிகளாக மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.

தாயக தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் இனியும் விழிப்பாக இருக்காவிடின் மீண்டும் ஈழம் சீரழிவதோடு ஈழத்தில் தமிழர்கள் எனும் இனம் இருந்ததற்கான அடையாளமே அழிக்கப்படும் இது மறுக்க முடியாத உண்மை.

Comments
Loading...