தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என சிங்கள மக்களுக்கு அச்சமாம்?

ltte-women copyவடக்கு மக்களுக்கு உதவி செய்வதை தென்னிலங்கை மக்கள் விரும்பவில்லையெனவும் புலிகள் உருவாகுவர் என்ற அச்சம் அரச அமைச்சரான மகிந்த அமரவீர என்பவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு ஏன் அதிக உதவி செய்கின்றீர்கள் என்று சிங்கள மக்கள் எங்களை நச்சரிக்கின்றார்கள். வடக்கில் புலிகளை உருவாக்கப்போகின்றீர்களா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அந்த நச்சரிப்புக்களையும் பொருட்படுத்தாமலேயே நாங்கள் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்றும் கடறொழில் நீதியல்வளத்துறை அமைச்சரான அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலேயே வடக்கு மாகாணத்திற்கே கடற்றொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. நாங்கள் வடக்கு, கிழக்கிற்கு அதிக உதவி செய்கின்றோம் என்று தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் எங்களை நச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களைச் செயற்பட விடாமல் தடுக்கிறார்கள்.
வடக்கில் புலிகளை உருவாக்கப்போகின்றீர்களா என்று எங்களைக் கேட்கின்றார்கள். ஆனால் நாங்கள் இதற்கு மசியாமல் உங்களுக்கான பொருளாதார மீட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
வடக்கிலுள்ள சிலர் தென்னிலங்கை மீனவர்கள் இங்கு வரவிடவேண்டாம் என்று இனவாத ரீதியில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
கடந்த காலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் சகோதர முறையில் வடக்கிற்கு வந்து ஒற்றுமையை வளர்த்தார்கள். தற்போது அவர்களையும் நாங்கள் புறக்கணிக்க முடியாது. உங்களுக்கு முன்னுரிமை கொடுகின்றோம். நீங்கள் அவர்களுடன் சகோதர உணர்வை வளர்க்கவேண்டும்.
தென்னிலங்கை மக்கள் கடந்த காலத்தில் பிரயோகிக்கப்பட்ட இனவாதம் என்ற கொடிய விடயத்தை இப்போது அறவே வெறுக்கிறார்கள். எனவே, வடக்கு மக்கள் தென்னிலங்கை மக்களின் நல்லெண்ணத்தைக் கைப்பற்றி அவர்களுடன் இணையவேண்டுமெனவும் யாழினில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...