Designed by Iniyas LTD
வடக்கில் கடற்தொழிலின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!
வடக்கில் கடற்தொழிலின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அடிப்படை வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை வட மாகாண கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது யாழ் பொது நூலக கோட்போர் கூடத்தில் வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சின் செயாளரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கு இவ் வாழ்வாதார உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்விற்கு வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பு. ஜங்கரநேசன் மற்றும் யாழ்ப்பாண மக்கள் வங்கி முகாமையாளர், கடற்தொழிற்ச் சங்க தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.