Designed by Iniyas LTD
மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைக்க வேண்டும்
மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைக்க வேண்டுமெனவும், மீன்பதப்படுத்தும் கிடங்கு அமைத்துத் தர வேண்டுமெனவும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மட்டும் 263 விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தடை காலத்தை அரசு மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பதப்படுத்தும் கிடங்கு அமைத்து மீன்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.