Designed by Iniyas LTD
செல்பீ எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி
கோவை பீளமேடு பகுதியில் செல்பீ எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து பலியான மாணவனின் உடல் 2 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. கோவை தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஹரீஷ், தம்முடைய நண்பர்களுடன் பீளமேடு பகுதியில் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
கிணற்றின் மீது நின்றுக் கொண்டு செல்பீ எடுக்க முயன்றபோது, கால் இடறி ஹரீஷ் கிணற்றுக்குள் விழுந்து பலியானார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து உடலை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடியும் தோல்வியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நூறு அடி ஆழத்தில் இருந்த ஹரீஷின் உடல் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.