தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு..

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த  இருவரையும் எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லக்மாலி ஜயதுங்க  உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு இளைஞர்களும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக   அவர்கள்மீது  குற்றம் சுமத்தப்பட்டு  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை குறித்த இருவர் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...