Designed by Iniyas LTD
முகநூலை திக்குமுக்காட செய்த தமிழர்கள்..
தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் ,
இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் முகநூலில் தமிழ் மக்கள் #prabhakaran_is_our_community_standard என்கின்ற #hagstag காஸ்ரக் ஒன்றை றென்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் முகநூல் மற்றும் ருவிற்றரில் இந்த காஸ்ரக்கில் தமிழீழ தேசிய தலைவரின் படம் அலங்கரித்து வருகிறது.
இதேவேளை தமது Community Standard க்கு எமது தேசிய தலைவரின் புகைப்படம் பொருத்தமானது அல்ல என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே முகநூல் நிர்வாகம் தமிழீழ தேசிய தலைவரின் படத்தை அழித்து வருகிறது.
இந்த நிலையில் உலகத்தமிழர்கள் தமிழீழ தேசிய தலைவரே எமது Community Standard என ரென்ட் செய்து முகநூலை திக்குமுக்காட செய்துள்ளனர்.