தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல்முறையாக சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்: பிரணாப் பெருமிதம்

pranabசுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, பண மதிப்பு நீக்கத்தை ஆதரித்ததன் மூலம் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் அமைதிப் புரட்சி நிகழ்த்தி உள்ளனர். கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு வரவேற்கத்தக்கது.

ஏழைகளுக்காக 1.2 கோடி மக்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். கிராமப்புற மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை சென்றமடைய தபால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஏழைகள், நலிந்தவர்கள், தலித் மக்களின் நலனை முன் வைத்தே மத்திய அரசின் கொள்கைகள் அமைந்துளள்ன. சிறு தொழில் வளர்ச்சிக்கான முத்ரா திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்குக் கடன் பெற்றுள்ளனர். முத்ரா திட்டம் மூலம் இதுவரை 5.6 கோடி பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.16 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 13 கோடி பேர் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  பயனடைந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...