தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரணாப் முகர்ஜியுடன் ஆங் சான் சூகி நேரில் சந்தித்து ஆலோசனை!

pranab_mukherjee-suu_kyiகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூகி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற சூகி, தில்லியில் தற்போது அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்களை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆங் சான் சூகி செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது, மியான்மரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்காக அவருக்கு பிரணாப் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, மியான்மர் அரசின் தேசிய மறுசீரமைப்புக் கொள்கைக்கு இந்தியாவின் ஆதரவை சூகி கோரியதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மாவுடன் சந்திப்பு: இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சூகி சந்தித்துப் பேசினார். அப்போது மியான்மர் நாட்டின் உள்கட்டமைப்பு, வேளாண்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும் என சூகி கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், மியான்மரின் வளர்ச்சிக்கு இயன்ற அளவுக்கு இந்தியா உதவும் எனக் கூறினார். மேலும், மியான்மர் ராணுவத்தினரைக் குறிவைத்து அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை சுஷ்மா தெரிவித்தார்.

மேகனகாவுடன் சந்திப்பு: சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்புக்குப் பிறகு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியை ஆங் சான் சூகி சந்தித்துப் பேசினார்.

Comments
Loading...