தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சவீழ்த்தி 136 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா!

350x350_IMAGE46643690இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியுள்ளது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தநது முதல் இன்னிங்சில் 79 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 136 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இந்நிலையில் நாக்பூரில் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என தெரிவித்தார்.

முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முரளி விஜய் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து நேற்று மாலை பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டியான் வான் டக்அவுட்டான நிலையில், நைட் வாட்ச்மேன் தாகீர் 4 ரன்களில் நடையை கட்டினார். இன்று 2வது நாள், தனதுஆட்டத்தை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா. ஆனால் சுழல்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர்.

கேப்டன் ஆம்லா 1, டுப்ளசிஸ் 10, எல்கர் 7, டேன் விலாஸ் 1 ரன்களில் அவுட்டான நிலையில், டுமினி மட்டும் சற்று போராடி 35 ரன்கள் எடுத்தார். நம்பிக்கை நட்சத்திரம், டிவில்லியர்ஸ், ஜடேஜா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். மொத்தமே 33.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். மிஸ்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தார். ஆகமொத்தம், தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் அனைத்துமே ஸ்பின் பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தன.

Comments
Loading...