Designed by Iniyas LTD
முன்னாள் இந்திய ராணுவத்தினரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
இந்தியாவில் ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம்’ குறித்த பிரதமரின் புதிய அறிவிப்பை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் ராணுவத்தினர் கைவிட்டனர். டெல்லியில்,80 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அவர்கள் பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே தகுதி ஒரே ஓய்வூதிய திட்டத்தை, அறிவிப்பாக மட்டும் இல்லாமல் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். எனினும், உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக தரும் வரை பிற வடிவிலான போராட்டங்கள் தொடரும் என்று முன்னாள் ராணுவத்தினர் கூறியுள்ளனர். மேலும் அனைத்து கோரிக்கைகளையும் அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் படைவீரர் சத்பீர் சிங் கூறுகையில். ஒரே தகுதி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும்.
மேலும், ராணுவ வீரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவ வீரர்கள் முன் வைத்துள்ள 4 கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றார்.
