Designed by Iniyas LTD
முன்னாள் பிரதமர் உட்பட அவரது குழுவினரை 15 நிமிடங்களில் துரத்துவதற்கு திட்டம்…
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பலவந்தமாக இருக்கும் முன்னாள் பிரதமர் உட்பட அவரது குழுவினரை 15 நிமிடங்களில் துரத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்ற ஆலோசனை வழங்குமாறு பாதுகாப்பிற்கு பொறுப்பான உயர் பிரதானி ஒருவர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் அலரி மாளிகையை விட்டு சென்ற முறையை முன்னாள் பிரதமர் கடைபிடிப்பார் எனவும் மகிந்த கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள போதிலும் தானே தற்போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
