Designed by Iniyas LTD
அரசியல் மாற்றத்தால் தமிழ் மக்கள் அச்சத்தில்..
யாழ். வீதி எங்கும் இனவாத சிந்தனை கொண்டவர்கள் வெடி கொழுத்தி கொண்டாடுவதை நேரில் காணக் கூடியதாக உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு மிக அபாயகரமான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ் மக்கள் தண்ணீரில் இருந்து தரையில் எறியப்பட்ட மீனாக இருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் நாம் நிதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜபக்ச ஓர் இனப்படுகொலையாளி, பல தமிழ் மக்களை கொன்று அழித்தவர். அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.
மகிந்தவின் மீள்வருகை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.