Designed by Iniyas LTD
முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து முக்கியசந்திப்பு…
முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த சந்திப்பு போராளிகள் கட்சியினருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப்புக்கும் இடையே இடம் பெற்றுள்ளது.
இதன்போது போருக்கு பின்னரான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதாரச் செயற்பாடு கள், சமூக நிலை, அரசியல் களத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாகவும் கலந் துரையாடப்பட்டுள்ளது.
அதோடு அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளின் வழி செயற்படாமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை தலை மையாகக் கொண்டுள்ள குடும்பங்களை இலக்கு வைத்து மேற் கொள்ளப்படுகின்ற நுண் கடன்கள் மூலம், தற்கொலை, மன உளைச்சல் மற்றும் பன்னாட்டு உதவிகள் வழங்கப்படவேண்டியமைக்கான தேவைகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது, யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் புலம்பெயர்ந்த எம் உறவுகளுக்கு வதிவிடம் வழங்கி அவர்களது மொழி, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பில் கரிசனை செலுத்திய சுவிட்சர்லாந்து அரசுக்கு முன்னாள் போராளிகள் சார்பிலும் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
