தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குழப்பத்தை உண்டுபடுத்துகிறதா ஜனநாயக போராளிகள் கட்சி?

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொண்டு பாரிய ஒரு இனஅழிப்பு நடத்தப்பட்டது.

ஒரு இனத்தின் விடிவுக்காக அனைவரும் போராடிவரும் நிலையில் மக்களின் உணர்வுகளை மதித்து உலகுக்கு ஒரு சேதியை உரக்க சொல்ல அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களது முயற்சி அனைவரும் ஒன்றிணைந்து செய்வதாக முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நேற்றைய தினம்  “ஜனநாயக போராளிகள்” என்ற கட்சியின், துளசி தலைமையிலான குழு ஒன்று சுடரேற்றிகுழப்பத்தை உண்டுபடுத்துகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்பட்டு, அங்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்களது நினைவேந்தல் ஆனது, எமது இன ஒற்றுமையின்மையை காட்டுவதாக அமைந்தது.

நினைவு நாள் தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பாரிய சிக்கல் நிலையில் இருந்தது.

அதையடுத்து அனைவரும் ஒன்றுபட்டு செய்வதாக முடிவுகள் எட்டப்பட்டு வரும் நிலையில், எமது ஒற்றுமையை குழப்பும் முகமாக முதலமைச்சருடன் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டு ஒற்றுமையாக நிகழ்வு இடம்பெறவேண்டும் என தெரிவித்துவந்த  ’ஜனநாயக போராளிகள்’ என்ற கட்சியின் ’துளசி’ தலைமையிலான குழு வழமைக்கு மாறாக நேற்று அந்த இடத்தில் சுடரேற்றியது.

இந்நிகழ்வு, தமிழரகள் ஒன்றுபட்டுவிட்டனர் என்பதனை குழப்பும் முகமாக, புலனாய்வாளர்களது பின்னணியிலா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல்வேறு குறைகளை கூறி உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி, பல முன்னாள் போராளிகளின் விருப்புக்கு மாறாக  தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதும் பல போராளிகள் இந்த கட்சியிலிருந்து விலகி சென்றதும் யாவரும் அறிந்ததே.

இது இவ்வாறு இருக்க ’அடுத்த முதலமைச்சர் யார்?’ என்ற போட்டி ஒருபுறம்; முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பிப்பாரா? என்ற குழப்ப நிலை வேறு.

இவைகள் காரணமாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையே பனிப்போர் நிலவுகின்றதும் யாவரும் அறிந்ததே.

மாணவர்களது, அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை பயன்படுத்தி செலவில்லாமல் முதலமைச்சரை அரசியல் பலமிழக்க செய்யலாம் என்று எண்ணிய சிலர், இன்றும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு தொடர்பில் ஊமைகளாய் இருப்பதும் இவர்கள் கூட ஜனநாயக போராளிகள் என்ற கட்சியின் துளசி தலைமையிலான குழுவை பயன்படுத்துகின்றனரா குழப்பத்துக்காக என்று கூட சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...