தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முறிகண்டி வசந்தநகர் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

மாங்குளம் – முறிகண்டி வசந்தநகர் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள சிறுவன்  அதே பகுதியை சேர்ந்த 8 வயதுடைய  சதீஸ்குமார் கனிஸ்டன்   என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சிறுவனின்   சடலம், கிளிநாச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை மாங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...