தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து 7 மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் ,மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்கு  திருமதி. நீலூகா ஏக்கநாயக்கவும், மத்திய மாகாணத்துக்கு ரெஜினோல்ட் குரேவும், தென் மாகாணத்துக்கு  மார்ஷல் பெரேராவும், வட மத்திய மாகாணத்துக்கு  எம்.ஜி. ஜயசிங்கவும், ஊவா மாகாணத்துக்கு பி.பீ. திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வட மாகாண ஆளுநராக கே.சி. லோகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் வட மேல் மாகாணத்துக்கு ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...