தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லத்தீவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளான காரணத்தை வெளியிட்டுள்ள பொலிஸார்…

நேற்று முன்தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்க சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு கொமாண்டோக்கள் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில்  இந்த கோர விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில்  விபத்து ஏற்பட்டதற்கான  காரணத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, பாதுகாப்பு பிரிவினர் பயணித்தபோது , வீதியின் குறுக்காக மாடு ஒன்று ஓடியதாகவும்,

அதனை காப்பாற்ற வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்த முயற்சித்தபோது  வாகனம் மரத்தின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தில் இராணுவத்தினரின் வாகனம் முழுமையாக சேதமடைந்ததோடு,  இந்த விபத்து இராணுவத்தினர் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...