Designed by Iniyas LTD
வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற ரயிலை விட்டு பிரிந்து சென்ற பெட்டிகள்….
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை தலாவ மற்றும் ஷாவஸ்திபுர பகுதிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர், எனினும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் மீண்டும் பிரிந்து சென்ற இரண்டு பெட்டிகளையும் பொருத்திய பின்னர் கொழும்பு நோக்கி ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

