Designed by Iniyas LTD
முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள்
முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள் தனியார் காணியில் வந்து தங்கியிருந்து தடைசெய்யப்பட்ட தொழில்களைச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முன்னைய காலத்தில் குறிப்பாக 1983 இற்கு முன்னர் அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் சுமார் 72 மீனவர்கள் வரை இங்கு தொழில் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது 250 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வந்து தொழில் செய்கிறார்கள். தனியார் காணியில் தங்கியும், கடலில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தியும் இவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தாம் தொழில் செய்யமுடியாதுள்ளது என்று அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். அனுமதியின்றி இவ்வாறு அத்து மீறும் மீனவர்களை முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களம் தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் இந்த அத்துமீறல் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கவனத்துக்கும் மக்கள் கொண்டுவந்துள்ளனர். சம்பவ இடங்களைப் பார்வையிட்ட அவர், இவைகுறித்து உரிய இடங்களில் பிரஸ்தாபிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.