Designed by Iniyas LTD
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் மீட்பு பணிகளில் 212 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வை12 ரக வானுர்திகள்..
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகளில், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 212 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வை12 ரக வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ள நிலையில் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
