தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு, நீர் மற்றும் ஆடைகளை வழங்குமாறு கோரிக்கை…

வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ளஅனர்த்தம் காரணமாக 2788 குடும்பங்களை சேர்ந்த 9161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  உலர் உணவு, நீர் மற்றும் விசேடமாக பயன்படுத்த கூடிய ஆடைகளை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது முகாம்களில் உள்ள தங்களை  பார்க்க வருபவர்கள், அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை எனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெள்ளம் காரணமாக கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Comments
Loading...