தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துங்கள் – ரவிகரன்

போரில் ஏதிலிகளான மக்களின் நிலங்களை பறித்து அவற்றைச் சிங்கள மக்களுக்கு வழங்கிஅவர்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சியை மகாவலி அதிகார சபை செய்து வருவதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டுகிறார். இது தொடர்பில் நேற்று வட மாகாண சபையில் அவர் கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றைக்கொண்டுவந்தார்.ravikaran

ஒரு மாகாணத்தின் இனப் பரம்பலை இயங்கைக்கு முரணாக மாற்றுவது அரசாங்கத்தின் காணிக்கொள்கையாக அமையக்கூடாது என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரையைச் சுட்டிக்காட்டியஅவர், அதற்கு மாறாகவே தற்போது இனப்பரம்பல் மாற்றி அமைக்கப்படுவதாகத்தெரிவித்தார். கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின்காணிகள் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டள்ளது.இதனால் சொந்த மண்ணில் நல உரிமையாளர்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். பறிக்கப்பட்ட தமது பாரம்பரியக் காணிகளில் அதன் சட்டவிரோத உரpமையாளர்களாகசிங்களவர்களிடம் தினக்கூலியாக வேலை செய்யும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையையும் இன அழிப்புக்கு ஒப்பானதாகவே கருதுகிறேன் எனவும் ரவிகரன் கூறினார். இதனைவிட தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் துண்டாடுவதற்காகதமிழர் தாயகத்தின் இதயப் பகுதியான முல்லைத்தீவை அபகரித்து அங்கு சிங்களக்குடியேற்றம் செய்ய முனைவோர் அதற்கு ஒரு கருவியாகவே மகாவலி அதிகார சபையைப்பயன்படுத்தி வருவதாகவும் ரவிகரன் தெரிவித்தார். இந்நிலையில் இதனைத் தடுக்க முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சிங்களக்குடியேற்றங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comments
Loading...