தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை மீனவர்கள் தமது கூலிகலாம்?? ஸ்ரீலங்காவின் முல்லை கட்டளைத் தளபதி

DSC01550முல்லைத்தீவின் மீன்பிடி உரிமைக்கு சிங்கள மீனவ சமூகமே உரித்துடையவர்கள் என முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடித் தொழிலை ஒட்டுமொத்தமாக தமிழர்களிடம் இருந்து பறித்து தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் இராணுவம் மற்றும் கடற்படையினரைக் கொண்டு சதி முயற்சி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் தொழில் தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய கடற்றொழில் அமைச்சால் நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அரச அதிபர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர், முல்லை மீன்பிடி உதவிப்பணிப்பாளர், கடல் தொழிற் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் முல்லையிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதுவும் உள்நோக்கம் உடையதாகவே அமைந்துள்ளது. இது தவிர முல்லைத்தீவு கரை வலைப்பாடுகளின் உரிமையாளர்களாக சிங்களவர்களே இருந்தார்கள் எனவும் இவர்களிடம் கூலித்தொழிலாளர்களாக தமிழ் மீனவர்கள் தொழில் செய்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஆதாரமாக 1965 ஆம் ஆண்டு கரைவலைப்பாடுகள் தொடர்பான வர்த்தமானியையும் முன்வைத்துள்ளார்.
கொக்குளாய் தொடக்கம் வெள்ளா முள்ளிவாய்க்கால் வரை 44 கரைவலைப்பாடுகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. இதில் உள்ளூர் சிறு தொழிலாளர்களுக்காக கள்ளப்பட்டில் நான்கு பாடுகளும், செம்மலையில் இரண்டு பாடுகளுமாக ஆறு பாடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுதி 38 பாடுகளை 56 பேர் வழங்கியுள்ளார்கள். 38 பேர் தமிழர்கள்.
இதனிடையே அமைக்கப்பட்டுள்ள குழுவினில் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத்தளபதியையும், கடற்படை அதிகாரியையும் முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடி பிரச்சனைகள் ஆராயும் குழுவில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...