Designed by Iniyas LTD
முல்லை வட்டுவாகல் காணிகளை ஸ்ரீ கடற்படைக்கு கொடுத்த சீனப்பிரஜை?
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகலப் பகுதி கடற்படைத் தளம் அமைந்துள்ள நில உரிமையாளர்களில் மூவர் குறித்த நிலங்களை கடற்படையினரிற்கு வழங்க சம்மதம் தெரிவித்தன் பெயரிலேயே இன்றைய அளவீட்டுப் பணிகள் இடம் பெறுவதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல்ப் பகுதியில் உள்ள கடற்படைத் தளமானது 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன நில உரிமையாளர்களின் அனுமதியின்றி பல தடவைகள் அளவீடு செய்ய முயன்ற போது மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தமையினால் அளவிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இறுதியாக கடந்த முதலாம் திகதி அளவீட்டிற்கான முயற்சிகள் இடம் பெற்ற போதும் நில உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு வீதியினையும் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் அழைக்கப்பட்டு மனுக் கொடுத்ததோடு தமது நிலம் தமக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் குறித்த பிரதேசம் அளவீடு செய்வது தொடர்பில் மாவட்ட அரச அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்பிரகாரம் நில உரிமையாளர்களிற்கான இழப்பீடு வழங்க வாக்குறுதியளிக்கப்பட்டு 3 நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு நிலம் வழங்க இணக்கம் தெரிவித்தவர்களாக இரு சிங்கள இணத்தவர்களுக்கும் தலா 50 ஏக்கர் வீதம் 100 ஏக்கரும் ஓர் சீனப் பிரஜைக்கான 48 ஏக்கர் நிலத்திற்குமா மொத்தம் 148 ஏக்கர் நிலத்தினை கடற்படையினருக்கு வழங்கி அதற்கான நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக்கொள்ளவே சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.