Designed by Iniyas LTD
முல்லை வருகிறார் மைத்திரி!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி 1500 காணிகளிற்கான அனுமதிப்பத்திரங்களும் 500 குடும்பங்களிற்கான வாழ்வாதாரமும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஏற்பாட்டுக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எதிர் வரும் 25ம் திகதி முல்லைத்தீவிற்கு வருகை தரும் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் பதில்ப் பணிப்பாளர் , மாவட்ட அரச அதிபர் , முல்லைத்தீவு மாவட்ட ஸ்ரீ இராணுவத் தளபதி , கட்டளைத் தளபதி , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெறும் பொது நிகழ்வில் பாடசாலைக் கட்டிடத் திறப்புடன் மாவட்டத்தின் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்படுவதுடன் 500 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதேபோன்று கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களிற்கான சான்றிதழ்களும் வழங்கிவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.