Designed by Iniyas LTD
முள்ளியவளையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவம்…
முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்வதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதன் காரணமாக கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் சென்று படையினரை நீர் எடுக்கவேண்டாம் என தடுத்தபோது படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
இதன்போது அங்கு செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்து வகையில் படையினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன் ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினை பறிக்க முற்பட்டுள்ளனர் .
மேலும் மக்கள் தமக்கு எதுவும் முறையிடவில்லை என்றும், ஊடகவியலாளர்கள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றீர்கள் எனவும் படையினர் கூறியுள்ளனர்.
அதோடு அங்கிருந்த ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் மற்றும் இராணுவ அதிகாரிகள் அவர்களை கடும் தொனியில் எச்சரித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.