தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அவ்விடத்திற்குச் சென்று அப்பகுதி மக்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இவ் அஞ்சலி நிகழ்வில் மக்களை அழைத்து செல்வதற்கான இலவச போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்படவுள்ளன.

Comments
Loading...