Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி படையெடுக்கும் உறவுகள்
2009 ம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாள்வரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் 11 மணிக்கு முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
தமிழர்களில் உரிமைகளை கோரும், தமிழ் மக்களது ஒற்றுமையை வெளிக்கொண்டுவரும் முகமாக, யாழ் பல்கலை மாணவர்களின் அயராத முயற்சியின் பயனாக இன்று அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து இந்த நினைவு நிகழ்வை அனுசரிக்கவுள்ளனர்.
அந்தவகையில் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் நினைவு நிகழ்வுக்காக மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்துக்கு வருகைதந்துகொண்டிருக்கின்றனர்.
