Designed by Iniyas LTD
முழங்காவில் துயிலுமில்லத்திலிருந்து வெளியேறியது இராணுவம்!
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் வடகிழக்கில் உள்ள மாவீரர்களின் துயிலும் இல்லங்களை ஸ்ரீலங்காப் படையினர் அழித்திருந்தனர்.
இந்த நிலையில் எருக்கலைக் காடுகளாக காணப்பட்ட துயிலும் இல்லங்களை கடந்த 2013ஆம் ஆண்டில் இராணுவத்தினர் தமது முகாங்களுக்காக அபகரித்தனர்.
இதன்படி துயிலும் இல்லங்களில் போராளிகளின் வித்துடல்கள்மீது இராணுவ தளங்களையும் இராணுவ பயிற்சி மைதானங்களையும் அமைத்து தமிழ் மக்களின் மனங்களை சீண்டும் வகையில் நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது முழங்காவில் துயிலும் இல்லத்தில் முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.