Designed by Iniyas LTD
முழு அடைப்பு போராட்டம்: சிவகங்கை, திண்டுக்கல் பகுதியில் திமுகவினர் ரயில் மறியல்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி நீரைத் திறந்துவிடக் கோரியும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு விவசாயச் சங்கங்கள்,வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆளுங்கட்சியான அதிமுகவைத் தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை-ராமேஸ்வரம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயிலை மறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.