Designed by Iniyas LTD
மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள யசூசி அகாசி கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்
மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி இன்றிரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாகவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.