Designed by Iniyas LTD
மெர்ஸ் நோய் பாதிப்பு: தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வு
தென் கொரியாவில் மெர்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய தென் கொரிய நோய்த்தடுப்பு மைய இயக்குநர் இதை தெரிவித்துள்ளார். நோய்ப்பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் மெர்ஸ் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏழு பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.